×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு… நீதிபதி எச்சரித்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று ஆஜராகவில்லை!!

விழுப்புரம் : பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எச்சரித்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறைண்டனை, ₹20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ₹500 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ராஜேஸ் தாஸ் நேரில் ஆஜரானார். அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில் வாதிட ஜனவரி 31ம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் 31ம் தேதி வாதிடவில்லை என்றால் பிப்ரவரி 3-ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகவில்லை.  விசாரணையின் போது ராஜேஷ் தாஸ் தரப்பில் ஜூனியன் வழக்கறிஞர் ஆஜராகி, வக்காலத்து மனு தாக்கல் செய்தார். அதாவது ராஜேஷ் தாஸ் வராத காரணத்திற்காக மனு தாக்கல் செய்தார். இதனை கடுமையாக எச்சரித்த நீதிபதி பூர்ணிமா, கடைசி வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் ராஜேஷ் தாஸ் தரப்பு வாதிட முன்வரவில்லை என்றும் ஆகவே நீதிமன்றமே ராஜேஷ் தாஸுக்கு வழக்கறிஞரை நியமிக்கும் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு… நீதிபதி எச்சரித்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று ஆஜராகவில்லை!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshtas ,Epilepura ,Rajeshtas Vilupuram ,Tamil Nadu ,Adimuga ,Special ,TGB ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில்...